திங்கள், 13 பிப்ரவரி, 2017

உலக காதலர்கள் தினம் ( 14-02-2017 ) இன்று !! காதலிக்கு தண்டனை கிடைத்திடுமா ? இன்று !!




உலக காதலர்கள் தினம் ( 14-02-2017) இன்று !!

காதலிக்கு தண்டனை கிடைத்திடுமா ? இன்று !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இன்று ( 14 -02-2017) உலக காதலர்கள் தினம் ஆகும்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற காதலர்கள் அனைவரும் இன்று, ஒருவருக்கொருவர், தங்கள் காதலை உள்ளத்துக்குள் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்திடும் விதமாக, வண்ண வண்ண 
மலர்க்கொத்துக்களை அன்புடன் வழங்கியும், அவரவர் வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ப, பரிசுப்பொருட்கள், மற்றும் மோதிரங்களை, காதலர்கள் தங்களால்காதலிக்கப்படும் 
காதலிக்கும், காதலிகள் காதலர்களுக்கும் பரஸ்பரம், மனமார, வாரி வழங்கி மன மகிழ்வினை வெளிப்படுத்துவார்கள் இன்றைய இத்திருநாளில்.

காதலர்கள் தினம் !!

இங்கே காதலர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் ஆண்,பெண், என இருபாலர்கலாக இருப்பது ஒரு பொதுவான நடைமுறை, ஏன், அணுகுமுறை என்றும்கூடச் சொல்லலாம். 

ஆனால், தமிழ் அகராதியில், காதல் என்ற சொல்லுக்கு, அன்பு, பாசம், ஒருவரை ஒருவர் 
நன்கு புரிந்து உணர்தல், என்றே அர்த்தம் வழங்கிடப் பட்டு உள்ளது. 

இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான,உளப்பூர்வமான எண்ணப் பரிமாற்றங்கள் ஒரே மாதிரியான 
எண்ணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் 
( ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும்) ஆண்கள்.தங்கள் இனத்தைச் சேர்ந்த ஆண்களிடமும், அதே போல பெண்கள், தங்கள் இனத்தைச் சேர்ந்த பெண்களிடமும் 
பரிமாறிக் கொள்வதும் உண்டு. 

அது நேரிடையாகவோ அல்லது
மறைமுகமாகவோ நடைபெறுவதும் உண்டு.
அந்த வழியில், உங்கள் அனைவருக்கும் மிகமிக 
நன்றாகவே தெரிந்திருந்த, புரிந்து இருந்த ஒரு "எல்லை தாண்டிய "அன்பு,பாசம் மற்றும் காதல் உணர்வுகளுடன் கூடிய பெண் நண்பர்கள் இருவர் இந்த தமிழகத்தில் இருந்திடத்தான் செய்தார்கள். அந்த இருவரும் சமூக 
அந்தஸ்த்தில், மிகவும் உயரிய இடத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது வரலாறு. 

அப்படி வாழ்ந்து வந்த அந்த இரண்டு பெண் நண்பர்கள் இருவரில், ஒருவர், கடந்த 
ஆண்டு கடைசி ஆங்கில மாதத்தின் முதல் வாரத்தில்,சுமார் 75 நாட்களுக்கு பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாரா அல்லது உயிர் இழக்க வைக்கப்பட்டாரா ? என்றெல்லாம் விவாதங்கள் 
ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற இந்த வேளையில் நான் அப்படிப்பட்ட விவாதங்களில் பங்கு பெறுவதைத் தவிர்த்து வருகின்றேன். 

ஆனால் அதே சமயம் அவர்கள் இருவரும் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில், ஒரே வீட்டில்ஒருவருக்கொருவர் " துணையாக, பாசமாக,உயிர் நேசமாக " வாழ்ந்து வந்தனர் என்பது இந்த நாடே அறிந்திட்ட உண்மை. 

அப்படி வாழ்ந்த அந்த இரண்டு பெண்களில் ஒருவர் மறைந்தார். மற்றொருவர் மறைந்த 
பெண் வாழ்ந்த இடத்தை அடைந்திட, மிகமிகக் கடுமையான முயற்ச்சிகளில் தன்னை ஈடு படுத்திக்கொண்டு வருவதும் நாடே அறிந்திடும் விஷயமாகும். அதில் தற்போது உயிருடன் இருக்கும் அந்த பெண், வெற்றி பெறுவாளா ?
அல்லது தோல்வியைத் தழுவிடுவாளா ? காலம் மட்டுமே  அறிந்திருக்கும் இரகசியம் ஆகும். 

ஆக, எஞ்சியிருக்கும் அந்த பெண், கடந்த காலத்தில் இறந்த தனது உயிர்த்தோழி,இவர்கள்
இருவரும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ள பல கோடிகள் அசையும், அசையாச்சொத்து இவைகளின் மீது அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் இன்றைய 
தினம் தனது தீர்ப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதனால்தான் இன்றைய தினம் நான் எழுதியுள்ள இந்தக்கட்டுரைக்கு கீழ்க்கண்ட பெயரில் தலைப்பினை வழங்கி உங்களது 
கனிவான பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன் எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உலக காதலர்கள் தினம் ( 14-02-2017) இன்று !!
காதலிக்கு தண்டனை கிடைத்திடுமா ? இன்று !!


காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளிவரும் என்று நம்மில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இன்று, நீதி வெல்லுமா ?அல்லது நீதி மறுக்கப்படுமா ? இல்லை நீதி விலை போகுமா ?

இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் இன்று காலை 10.30மணியளவில் கிடைத்திட இருக்கிறது. நாமும் அதுவரை சற்று பொறுமையோடு காத்திருப்போமே !! என்ன குறைந்து விடப்போகிறது ?

என்னதான் நடக்கும் !! நடக்கட்டுமே !!
இருட்டினில் நீதி மறையட்டுமே !!
தன்னாலே வெளிவரும் தயங்காதே !!-ஒரு 
தலைவன் இருக்கிறான் !! மயங்காதே !!

எனும் கவியரசர் கண்ணதாசனின் பாடலோடு இந்தக் கட்டுரையை முடித்துவைக்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.


சனி, 28 ஜனவரி, 2017

மூத்தவர்கள் வாழ்த்துங்கள் !! இளையவர்கள் கைகொடுங்கள் !! சின்னஞ்சிறுசுகள் கரவொலி எழுப்புங்கள் !! இன்று ( 29-01-2017 ) 42வது திருமண நாள் !!



மூத்தவர்கள் !!வாழ்த்துங்கள் !!
இளையவர்கள் !! கைகொடுங்கள் !!
சின்னஞ்சிறுசுகள் !! கரவொலி எழுப்புங்கள் !!



இன்று எங்களுக்கு ( 29-01-2017) 42வது திருமண நாள் !!



உலகம் முழுவதும் வாழ்ந்துவருகின்ற 
அன்பும் பண்பும் ஒருங்கே கலந்து தமிழ் இனத்தின் மாண்பினை, கலாச்சாரத்தை, பண்பாட்டினை இந்தப் புவியெங்கும் புகழ்பரப்பி வாழ்ந்துவருகின்ற ஆருயிர் தமிழர்கள் அனைவருக்கும், எங்கள் இருவரின் சிரம் தாழ்ந்த,கரம் குவிந்த, மனம் கனிந்த, உளம் குளிர்ந்த,அன்பு கலந்த, அதிகாலை 
வணக்கங்களை உங்கள் அனைவரது பொற்கமல பாதங்களில் பணிவுடன் சமர்ப்பித்து மகிழ்ச்சி பெறுகின்றோம்.

அன்று 29-01-1975 ம் ஆண்டு இந்தக்கட்டுரையை வரைந்து கொண்டிருக்கும் எனக்கும் எனது இல்வாழ்க்கைத்துணைவி அன்பிற்குரிய புனிதவதி, இருவருக்கும் தூத்துக்குடி 
நகரில் இல்லறம் என்ற நல்லறத்தில் நாங்கள் இணைந்த நல்லதோர் திருநாள். 

ஆண்டுகள் 42 நேற்றுடன் நிறைவு பெற்று இன்று முதல் நாங்கள் இருவரும்   43 வது ஆண்டினில் 
அடியெடுத்துவைக்க இருக்கின்றோம். 

இந்த நல்ல வேளையில், உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனது முகநூல் நண்பர்கள், உற்றார்,உறவினர்கள்,அனைவரிடமும் நாங்கள் 

                       (TR.பாலு  + புனிதவதி ) 

இருவரும் இன்முகத்துடன் வேண்டுகின்றோம் :-

மூத்தவர்கள் !! எங்களை வாழ்த்துங்கள் !!
இளையவர்கள் !! கைகொடுங்கள் !!
சின்னஞ்சிறுசுகள் !! கரவொலி எழுப்புங்கள் !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நன்றி !! வணக்கம் !!

என்றும் அன்புடன் !!
உங்கள் தமிழன்பன்.
மதுரை T.R.பாலு.
திருமதி B.புனிதவதி .

சனி, 14 ஜனவரி, 2017

பெரும்பாலான நாஞ்சில் (நாகர்கோவில் ) நாட்டு மக்கள் பொதுவாக எப்படி இருப்பார்கள் ?மறைந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கருத்து இது !!




பெரும்பாலான நாஞ்சில் நாட்டு மக்கள் (நாகர்கோவில்)பொதுவாக எப்படி இருப்பார்கள் ?


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 
மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
உரியதாக இருக்க எல்லாம் வல்ல இறை 
அருளை வேண்டுகிறேன்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

மறைந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 
தன்னுடைய கவிதைப்பதிவில் ஓரிடத்தில் 
என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் :-

நாஞ்சில் நாட்டான் !!- அவன் !! 
நஞ்சிலும் கொடியோன் !!
கெஞ்சினால் அவன் மிஞ்சுவான் !!
மிஞ்சினால் அவன் கெஞ்சுவான் !!
தஞ்சமென்று அவன் வந்திடுவான் !!
தரணியெங்கிலும் புகழ் பெறுவான் !!
வஞ்சகத்து குணமுடையனவன் !!
வாழ வைத்தோரை கழுத்தறுப்பான் !!

இது என்னுடைய கருத்தல்ல தமிழர்களே !!
மறைந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கருத்து. 

இந்தக் கருத்துக்கும் சமீபத்தில் மறைந்த ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 
" இன்னோவா " மகிழுந்தினை கட்சியின் 
தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு 
தற்போதைய புது பொதுச்செயலாளராக தேர்வு 
செய்யப்பட்ட ஜெயாவின் "ஆருயிர்த் தோழி"
சசியை பயமுறுத்தி, அந்தக்கட்சியை விட்டுவிட்டு தி.மு.க.வில் இணையப்போவதாக ஒரு வதந்தி ஒன்றினையும் பரவ விட்டு, அதன் பிறகு சசியிடம் " பெற வேண்டியதை " பெற்றுக்கொண்டு இன்று வளமான வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, 
அரசியல் புரோக்கர் கலிங்கப்பட்டி துரோகி, மாமா வைகோவின் படைத்தளபதியாக ஒரு காலத்தில் வலம் வந்தவரும் மேடைப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் அவர்களுக்குத்தான் இந்தப்பாட்டு என்று தயவுசெய்து யாரும் எண்ணிடவேண்டாம்
என இத்தருணத்தில் கேட்டுக்கொண்டு அன்பு கலந்த நன்றி பாராட்டி உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

( பின்குறிப்பு:- இந்தப் பாடல் விபரங்களை எனக்கு வழங்கியவர் எனது அன்பு உடன்பிறப்பு மதிப்பிற்குரிய மருத்துவர். T.R. சோமசுந்தரம் அவர்கள் மூன்று தினங்களுக்கு முன்பாக, பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களால் 
வழங்கப்பட்ட கருத்து. அதனை கட்டுரை வடிவில் எனது சிந்தனையையும் சிறிதளவு கலந்து உங்களுக்கு வழங்கி இருக்கிறேன்.நன்றி)

சனி, 31 டிசம்பர், 2016

இன்று ( 01-01-2017) மாலை 7 மணிக்கு தவறாமல் K.TV. தொலைகாட்சி பாரீர் !! நான் சிறு வேடம் ஏற்று நடித்த " பிரம்மன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது !!






இன்று ( 01-01-2017) மாலை 7 மணிக்கு தவறாமல் நீங்கள் அனைவரும்  
K.TV. தொலைகாட்சி பாரீர் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் 
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான் சிறுவேடம் ஏற்று நடித்த " பிரம்மன் "
திரைப்படம் இன்று மாலை 7 மணிக்கு 
கே.TV.யில் ஒளிபரப்பாகின்றது.

மதுரை மண் தந்த இளவரசர் நடிகர் திரு.சசிகுமார் அவர்கள் நடிக்க, இயக்குனர் திரு. சாக்ரட்டீஸ் அவர்களின் திறமையான இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 
வெளிவந்த திரைப்படம்தான் " பிரம்மன் "  என்ற 
வண்ணக்காவியம்.

அதில் இடைவேளைக்குப் பிறகு, நானும் நடிகர்.
திரு. சசிகுமார் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்பட 
நிறுவனத்தில் நேர்காணல் பேட்டிக்கு காத்து 
இருப்பதுபோன்ற ஒரு காட்சி. 

அதில் கதை சொல்ல வந்திருக்கிறேன்,என்று நானும் எனது பெயர் என்ன என்று கேட்கின்ற பொழுது நான்  எனது பெயர் மதுரை. T.R. பாலு என்றும், சினிமா கம்பெனிக்கு கதை சொல்ல வந்திருப்பதாகவும், யாரிடம் நீங்கள் பணியாற்றி இருந்தீர்கள் என்ற கேள்விக்கு மறைந்த A.P. நாகராஜனிடம் என்று பதில் சொல்ல,
அப்போது சினிமா கம்பெனி உதவியாளர், அப்போ நீங்க திருவிளையாடல் காலத்திலேருந்து வரீங்க என்று கேட்பார். இது ஒரு நகைச்சுவை காட்சி.

தலையில் தொப்பி ( Cap) வைத்துக்கொண்டு அதில் நான் நடித்துள்ளேன்.

என் அன்புத்தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் இந்த " பிரம்மன் " திரைப்படத்தை தவறாமல் பார்த்திட வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

செவ்வாய், 29 நவம்பர், 2016

உண்மையில் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி ? ஒரு மண்ணும் புரியலையே !!





உண்மையில் மனதில் என்னதான் 
நினைத்துக்கொண்டிருக்கிறார் திரு. மோடி ?



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை 
வணக்கங்கள் உரியதாக ஆகட்டும்.

கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவரும் 
இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால 
கூட்டத்தொடரில் பிரதமர் வெறும் 1/2 நாள்
மட்டுமே ( அதுவும் கடனுக்கு, மூஞ்சியை 
கடுவன் பூனைபோலவே வைத்துக்கொண்டு)
வந்து சென்றது, நாமெல்லாம் ஒரு ஜனநாயக 
நாட்டில்தான் இருக்கிறோமா ? அல்லது ஒரு 
சர்வாதிகார நாட்டினில் வாழ்ந்து வருகிறோமா ?
என்ற சந்தேகத்தை, ஐயப்பாட்டை , ஒவ்வொரு 
இந்தியக்குடிமகனது நெஞ்சிலும் வளர்த்து வருகிறார் பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள், என்று சொன்னால், அது மிகையான சொல்அல்ல என்று நம்மில் பலர் எடுத்துரைக்க இங்கே வரிசையில் காத்திருக்கிறார்கள், எப்படித்தெரியுமா ? அவங்க அவங்க, பாடுபட்டு, கஷ்டப்பட்டு, நெத்தி வியர்வை நிலத்தில் வீழ, சம்பாரித்து வங்கியில் சேர்த்து வைத்த,அவங்க 
சொந்தப்பணத்தை, இந்த கேடுகெட்ட மனுசன் இந்த மாசம், எட்டாம் தேதி, திடுதிப்புன்னு, தொலைக்காட்சியில் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுன்னு 
சொன்னானே பாவி மனுசன், அதன்பிறகு, பழைய நோட்டைக் கொடுத்துட்டு புது நோட்டு வாங்க அங்கே வங்கிகளின் வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்களே வரிசை வரிசையாக, அது மாதிரி ( இது எப்டி இருக்கு )


இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன், நரேந்திர மோடிக்கு இந்த நாட்டை என்ன 99 வருசம் ஒட்டுமொத்த குத்தகைக்கு வுட்டுட்டாங்களா இந்த நாட்டு ஏழை,
எளிய, நடுத்தர, உழைத்துப் பிழைக்கும் தொழிலாளதோழர்கள் ? ( டாட்டா பிர்லா ,   ரிலையன்ஸ்அம்பானி அதானி போன்ற 
பெரும் கோடீஸ்வர முதலாளிகள் என்றுமே மோடியின் பின்புறம்தான் மன்னிக்கவும் அவர்களோட பின்புறம்தான் மோடி-இது ஊர் உலகறிந்த உண்மைதான்) கேவலம் 
ஒரு அஞ்சே அஞ்சு வருஷம்உனக்குஆளுவதற்கு 
ஒருதற்காலிகஉரிமைமட்டுமேகொடுத்துள்ளனர் 
இந்திய நாட்டு மக்கள் என்பதைமோடிஅவர்களே 
மறந்துவிடக் கூடாது. பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன்,அங்கே வந்து பேச மாட்டேன் என்று அடம்பிடித்தால்,நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன், பாடம் படிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும்LKG,UKG,பள்ளிபிள்ளைகளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் ?

தயவுசெய்து பதில் சொல்லுங்க மோடிஜி. நீங்க இப்படி ஒரு நெஞ்சில் உரம் இல்லாத நபராக, கோழையாக,பயந்தாங்கொள்ளியாக, பொம்பள போல ( அந்தக்கால பொம்பள) இருப்பீங்கன்னு, சத்தியமா எந்த இந்தியக் குடிமகனும் நினைச்சே இருந்திருக்க மாட்டார்கள் என்பதை நான் எந்தக் கோவிலிலும் அடிச்சு சத்தியம் செய்திட தயாராக இருக்கிறேன். ஏன் இப்படி ஆயிட்டீங்க மோடிஜி ? இது நல்லாவே இல்லை. உங்க பேருக்கும் 
இதுவரை இருந்த புகழுக்கும் இது ஆகவே ஆகாது.

இந்த மாதிரி நீங்க நடந்துகிட்டு இருந்தா, அடுத்து வரும்2019ல்நடைபெறஉள்ள பாராளுமன்றத்தேர்தலில், சத்தியமா சொல்றேன் 5 இடங்கள் கூட உங்ககட்சிபிடிக்கமுடியாது.ஆமாஅம்புட்டுத்தான்நான் சொல்வேன்.

என்னய்யா கொடுமையா இருக்கு ? இதைப் பத்தி 
எந்த ஊடகமோ, அல்லது பத்திரிகையோ எதற்காக கேள்வி கேட்காமல், வாய்மூடி மவுனியாக இருக்குது ?மத்திய அரசு தருகின்ற விளம்பரங்கள், நின்று விடுமோ என்ற அச்சமா ? இதுதான் நீங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் செய்கின்ற வேலையா ? இல்ல 
நீங்களும் மோடிஜி போல பொம்பளையா போயிட்டீங்களா ?

நான் கேக்கல, இந்த இந்தியத்திருநாடு கேக்குது இந்த நாட்டுலே இருக்குற வங்கி வாயிலில் வரிசையா காத்திருக்குற அப்பாவி மக்கள் கேக்குறாங்க. தயவு செய்து வாயைத்தொறந்து பதில் சொல்லுங்க. 

உங்களோட பதிலுக்கு இந்தியத் திருநாடே காத்திட்டு இருக்கு. 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR. பாலு.

செவ்வாய், 15 நவம்பர், 2016

சத்தியம் அது சக்கரைப்பொங்கல் !! விடிஞ்சா அதுவே வெண்பொங்கல் !!







சத்தியம் அது சக்கரைப்பொங்கல் !!விடிஞ்சா அதுவே வெண்பொங்கல் !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய வலைதள 
வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய 
காலை வணக்கங்கள்.

என்ன...காலங்காத்தாலேயே சத்தியத்தைப்பத்தி 
பொளந்துகட்ட மதுரை TR.பாலு வந்துட்டாரா ?
என்று எனது இந்தப்பதிவைவாசிக்கும்அனைத்து 
நேயர்களின் எண்ணங்களை என்னால் இங்கே 
இருந்துகொண்டே அனுமானித்திட முடிகிறது 
என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

நான் எதற்காக, இந்த சத்தியத்திப்பற்றி இங்கே 
உங்களுடன் விவாதிப்பதற்கு, அதைப்பற்றி 
விரிவாக எழுதுவதற்கு முன்வந்துள்ளேன் 
என்று கேட்டால், அன்புத்தமிழ் நெஞ்சங்களே 
இந்த சத்தியத்தை அந்தக்காலம் முதல் இந்தக் 
காலம் வரையிலும் நமது இந்தியத்திருநாடு 
கைவிட்டு அதனைமதிக்காமல்அந்தசத்தியத்தை 
புறந்தள்ளிய ஒரே காரணத்தால் மட்டுமே இங்கே இன்றளவும் வறுமையும் பஞ்சமும் ஒன்றோடு ஒருசேர இணைந்து நாட்டியமாடிக்கொண்டு நமது நாட்டை பஞ்சைகள் வாழும் பூமியாக, பராரிகள் வலம்வரும் தேசமாக மாற்றிவிட்டது என்று சொன்னால் அது மிகையான வாசகம் அல்ல.

எப்படி என்றால் நமது இந்தியத்திருநாடு (சுதந்திரம் அடையும் வேளையில் ) தனித்தனி சமஸ்தானங்களாக பல்வேறு குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழ் பிரிந்து கிடந்த வேளையில்இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட மறைந்த சர்தார் வல்லபாய் படேல் ஒவ்வொரு சமஸ்தானங்களின் 
மன்னர்களை நேரிடையாக சென்று சந்தித்து, நாம் ஒரே நாடாக, ஒன்றிணைந்த இந்தியாவாக மாறிட வேண்டும் என்றால், நீங்கள் உங்களது தனிதனி சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து ஒரே நாடாக, ஜனநாயக நாடாக, மக்களால் இந்த நாடு ஆளப்பட, தேர்தல் மூலம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற நடைமுறைகளுக்கு மாறிட வேண்டும்.அப்போதுஅந்தந்தசமஸ்தானங்களின் 
மன்னர்கள் வல்லபாய் படேலிடம், அப்படி இணைப்பது என்றால், நாங்கள் இதுவரை அனுபவித்து வந்த வசதிகளை தொடர்ந்து அன்புவிக்க, நாங்கள் மட்டும் அல்ல, எங்களுக்கு பின் எங்களது வாரிசுகள் மற்றும் அவர்களது வாரிசுகள் என்று தொடர்ந்து முடியும் வரை 
எங்களுக்கு நீங்கள் மன்னர் மானியம் தருவதாக 
சத்தியம்செய்துஅதனைஒப்புதல்வாக்குமூலமாகஎழுத்துவடிவில், தரவேண்டும். கடைசி வரை அந்த சத்தியம் உங்கள் காலத்திற்குப் பிறகும், காப்பாற்றப்பட்டு,அதன்வாயிலாகஎன்றென்றும் எங்களுக்கு மன்னர் மானியம் கிடைத்துக்கொண்டே வரவேண்டும். அதற்கு தாங்கள் சம்மதித்தால், சத்தியம் செய்து சம்மதித்தால், நாங்கள் ஏக இந்தியாவோடு 
எங்களது சமஸ்தானங்களை இணைக்க சம்மதிக்கிறோம் என்று சொல்ல, அவர்கள் கேட்டுக்கொண்டபடி பண்டித நேரு மற்றும் காந்தி இவர்களது முன்னிலையில்,
ஒவ்வொரு சமஸ்தானமும் அதனதன் மன்னர்களும்இந்திய அரசாங்கத்தின் சமஸ்தான இணைப்பு ஒப்புதல் பத்திரங்களில் இருதரப்பினரும் கையொப்பமிட்டு 
இறுதிவரை மன்னர்மானியம் வழங்கப்படும் என்று இந்திய அரசாங்கம்சத்தியம் செய்தது அதன் பின்னரே அனைத்து சமஸ்தானங்களும் நமது நாட்டுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஏக இந்தியா என்ற நாடு உதயமானது.

" சத்தியம் " அது சக்கரைப்பொங்கல் ஆனது !!

1970ம் ஆண்டின் பிற்பகுதியில், அப்போது இந்தியாவின் பிரதமர்  பதவியில் இருந்த, மறைந்த இந்திராகாந்தி அம்மையார், நாட்டின் பெரும்பான்மையான பணம்,இந்த மன்னர்களுக்கு மானியமாக வீணாகப் போகிறது, அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று எண்ணி, மன்னர் மானிய ஒழிப்பு என்ற ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்து, சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் போது, அவரது தந்தையார் ஜவகர்லால் நேரு செய்து 
கொடுத்த ( சமஸ்தான குறுநில மன்னர்களுக்கு)
சத்தியத்தை சக்கரைப்பொங்கல் ஆக்கிய பெருமை இந்திராகாந்தி அம்மையாரே சேரும். இதுதான் நமது இந்தியத்திருனாட்டில் சத்தியம் அது சக்கரைப் பொங்கலான கதை எண்.1.

சத்தியம் அது சக்கரைப்பொங்கலான கதை எண்.2. 

கடந்த எட்டாம் தேதி இரவு சுமார் 08.30 மணி அளவில் இபோதைய பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஐநூறு,மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததே சத்தியம் அது சக்கரைப்பொங்கல் ஆன
கதை எண்.2 என்று கருதப்படுகிறது. நான் ஏன் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு இந்திய ரூபாய் நோட்டு தாள்களிலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ன சொல்லி அதன் கீழ் கையொப்பம் செய்து 
இருப்பார் என்று கேட்டால் :-(ஆங்கிலத்தில்) :-

I promise to pay the bearer the sum of Rupees .............

இதன் தமிழாக்கம் :-

நான் சத்தியம் செய்கிறேன் இந்த நோட்டை 
வைத்திருப்பவருக்கு ..............ரூபாய் தருகிறேன்....

பார்த்தீர்களா அன்பர்களே,எப்படி ஒரு மோசடித்தனமான, பித்தலாட்டம் மட்டுமே 
நிறைந்த மோடி அரசாங்கத்தின் செயல் என்று. இந்த பணம் செல்லாததாக அறிவிக்கும் திட்டத்திற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனராகப் பொறுப்பில் இருந்த திரு. ரகுராம் ராஜன் மறுத்த ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே, அரசியல் புரோக்கர் திரு. சுப்பிரமணியம் சுவாமி மூலமாக, திரு. ரகுராம் ராஜனுக்கு கடுப்பு 
ஏற்றி அவரை வலுக்கட்டாயமாக, பதவியை ராஜினாமா செய்ய வைத்த பெருமையும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே சேரும் என்பதையும் நான் இங்கே நேயர்களிடம் தெரிவித்துக்கொண்டு அன்பு வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.


நன்றி !!  வணக்கம்  !!


அன்புடன். மதுரை. TR. பாலு.


புதன், 21 செப்டம்பர், 2016

தினம் ஒரு சிந்தனை !!







தினம் ஒரு சிந்தனை !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கம்.

இன்றையதினம் நமது வலைதளமான

" தினம் ஒரு சிந்தனை "

பகுதியில் பதிவு செய்திடவிரும்பும் 
கருத்து :-


எதிரியைக் கூட ஒருவேளை மன்னிக்கலாம் !!.

துரோகியை ஒருபோதும் மன்னிக்கவே கூடாது !!


நாளை சந்திப்போமா நேயர்களே !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.